மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது: விவசாயிகள் மிகழ்ச்சி
தமிழக முதல்வர் மேட்டூரில் கடந்த 12ம் தேதி திறந்து விட்ட தண்ணீர் கரூரை வந்தடைந்தது. இதனைக் கண்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.;
டெல்டா மாவட்ட குறுவை பாசனத்துக்கா காவிரியாற்றில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்த்து. . விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் 10 ஆயிரம் கன அடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
அந்த தண்ணீரானது சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை கடந்து இன்று கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது.
பண்பகல் 12 மணியளவில் விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது டெல்டா மாவட்டங்களை நோக்கி சென்று கொண்டுள்ளது. திருச்சி மாவட்டம் முகொம்புக்கு நாளை அதிகாலை சென்றடையும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகல் 12 மணி நிலவரப்படி சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளதாகவும், மாலைக்குள் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.