24 மணி நேரத்தில் மாணவிகளுக்கு பேருந்து வசதி

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வீடு திரும்ப பேருந்து வசதி தேவை என கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றம்.

Update: 2021-12-13 14:00 GMT

பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் இளம் தளிர் இல்லம் திட்டத்தினை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெள்ளியணை பள்ளியில் தொடங்கி வைத்தார்.

அப்போது மாணவி ஒருவர் வெள்ளியணை அரசு பள்ளிக்கு வீரணம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்க வருவதாகவும், பள்ளி 4.30 மணிக்கு முடிந்த பிறகு ஆறு மணிக்கு பிறகே தங்கள் ஊருக்கு செல்ல பேருந்து உள்ளதாகவும், அந்த பஸ்சில் சென்றால் இரவு 7 மணிக்கு மேல் வீடு செல்லும் நிலை உள்ளது.  எனவே, பள்ளி முடியும் நேரதில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, மாணவியின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்தில் பள்ளி முடியும் 4.30 மணி அளவில் வீரணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வகையில் பேருந்து வசதி என்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வசதியை பள்ளி வளாகத்தில் இருந்து கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டசபை உறுப்பினர் சிவகாமசுந்தரி தொடக்கி வைத்தார். இந்த பேருந்து மூலம் சுமார் 50க்கும் அதிகமான மாணவிகள் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீரணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவில் செல்லும் வசதி ஏற்பட்டது.

கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்தில் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழக அரசுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News