கரூர், லாலாபேட்டை அருகே ஆம்புலன்சில் 'குவா குவா' : தாயும்,சேயும் நலம்

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே பிரசவத்துக்கு கர்ப்பிணிப்பெண் செல்லும்போது ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது.

Update: 2021-07-11 11:52 GMT

ஆம்புலன்சில்  பிறந்த குழந்தையுடன் மருத்துவ உதவியாளர்.

கரூரில் பிரசவத்துக்கு செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவ வலி ஏற்பட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  நலமாக உள்ளனர்.

      கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள அந்தரப்பட்டியை சேர்ந்த அபிநயா என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்துக்காக கள்ளப்பள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

      அங்கிருந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி, கர்ப்பிணி பெண் அபிநயாவை கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். மணவாசி சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, கர்ப்பிணி அபிநயாவுக்கு பிரசவ வலி அதிகமாகியது.

     இதையடுத்து, ஆம்புலன்ஸ்சில் உள்ள  மருத்துவ உதவியாளர் கோவிலன், ஆம்புலன்சிலேயே அபிநயாவுக்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து ஆம்புலன்சிலேயே அபிநயாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, தாய் மற்றும் குழந்தையை அடுத்த கட்ட சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

     தற்போது, அபிநயாவும், அவரது குழந்தையும் நலமுடன் உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கோவிலன் மற்றும் ஓட்டுனரை அனைவரும் பாராட்டினர்.

Tags:    

Similar News