மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியை நெருங்கியது
காவிரி மாயனூர் கதவணை நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் இன்று சுமார் 50 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.;
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இருப்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதன் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் வினாடிக்கு 49,198 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.
கரூர் மாயனூர் கதவணை நேற்று 43-ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து அதிகரித்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 49,198 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. மாயனூர் கதவணையில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால், தண்ணீரானது காவிரி ஆற்றில் அப்படியே 49,198 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.