கரூர் தனியார் நிறுவனத்தில் ரூ.1.64 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

கரூர் தனியார் நிறுவனத்தில் ரூ.1.64 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். போலீசார் விசாரணை.;

Update: 2022-03-05 12:30 GMT
கரூர் தனியார் நிறுவனத்தில் ரூ.1.64 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை
  • whatsapp icon

கரூர் மாவட்டம், மாயனூர் புது தெருவைச் சேர்ந்தவர் பூமாரி சாமி (வயது55). இவர் கிருஷ்ணராயபுரம், கள்ளுக்கடை பாலம் அருகே ஏற்றுமதிக்கு வியாபாரம் செய்யும் துணிகளுக்கு டையிங் செய்யும் யூனிட் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தில் கடந்த 1-ம் தேதி வேலைகளை முடித்துக் கொண்டு, தனது நிறுவனத்தை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வீட்டின் அருகில் உள்ளவர்கள் டையிங் யூனிட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட பூமாரி சாமிக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அவர் தனது நிறுவனத்திற்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தபோது டிராவில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்து 64 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து மாயனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து சென்று நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். மேலும் இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News