சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

கரூரில் பெண் ஊராட்சி தலைவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை கோரி அவரது மகள்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

Update: 2021-06-16 15:55 GMT

    கரூர் அருகிலுள்ள காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவராக கிருபாவதி என்ற பெண் இருந்து வருகிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில்  பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்  இவரது மகள். பிரனீதா

சகோதரியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது, காதப்பாறை ஊராட்சி தலைவரான எனது தாயார் கிருபாவதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் சங்கர் என்ற நபர் ஊராட்சி சொந்தமான கிணற்றிலிருந்து அனுமதியில்லாமல் தண்ணீர் எடுத்து வந்தார். இதுகுறித்து  ஊராட்சி  தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் அந்த நபர் எனது தாயார்  கிருபாவதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூராக பரப்பி விடுகிறார். எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி எனது தாயார் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Similar News