கொலை வழக்கில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
கரூர் எலக்ட்ரானிக்ஸ் கடை ஊழியரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு.;
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சூரப்பநாயக்கனூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் ( 24) என்பவர் கடந்த 15.08.2021 ம் தேதி பள்ளப்பட்டியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலையை முடித்து விட்டு இரவு வீடு திரும்பியபோது, புளியம்பட்டி பிரிவு அருகே ரமேசை சிலர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களை கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். கரூர் மாவட்ட கண்காணிப்பாளரின் பரிந்துரையின்படி இவ்வழக்கில் சம்மந்தப்பட் முக்கிய குற்றவாளிகளான திண்டுக்கல் மாவட்டம் நிலக்க்கோட்டையைச் சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் சண்முகவேல் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவின்படி ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் இருந்த இருவரும் இன்று 26.10.2021 ம் தேதி குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டனர்.