வட மாநில வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வடமாநில வாலிபரை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.;
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் தாராபஞ்சாயத் அருகே மெசுகன்பூர் பகுதியை சேர்ந்தவர் தர்விந்தர் மகன் சோஷித்குமார்(19). இவர் முருகம்பாளையத்தில் உள்ள வெள்ளரிக்காய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் புன்செய் புகளூர் பகுதியை சேர்ந்த ரவி( எ) ரவிச்சந்திரன் மனைவி வனிதாவும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அரிவாளுடன் தனது மனைவி வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு இன்று வந்தார். அங்கிருந்த சோஷித்குமாரிடம் அமர்ஜித் என்பவர் குறித்து விசாரித்துள்ளார். இதி்ல் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அரிவாளால் சோஷித்குமாரை வெட்டியதுடன் இனிமேல் என் மனைவிக்கு போன் செய்தால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த சோஷித்குமார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்ப்பட்டுள்ளார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.