சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் காவலர்கள் பள்ளி மாணவர்களின் ஓவியப் போட்டி
சிறந்த சமுதாயத்தை உருவாக்க காவலர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.;
அக்டோபர் 21 ம் நாள் காவலர் வீரவணக்க நாள் கரூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது . இந்நிகழ்வில் கரூர் மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, பணியின்போது உயிர் நீத்த காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செரலுத்தினர்
இதைத் தொடர்ந்து காவலர்களின் தியாகத்தையும், நாட்டிற்காக உழைத்து இறந்த காவலர்களின் வீரத்தை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில், இன்று கரூர் பரணி பார்க் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை பள்ளிகளில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு காவலர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஓவியப்போட்டிகள் நடைபெற்றது.
இதில், இரண்டு பள்ளிகளை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.