கிணற்றில் தவறி விழுந்த ஆடு பத்திரமாக மீட்பு
30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.;
கரூர் அருகிலுள்ள ஜல்லிவடநாயக்கனூரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது ஆடு அந்தப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது அங்குள்ள 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதுகுறித்து சரவணன் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றின் மேலிருந்து கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அங்கு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டை மீட்டனர். கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டை சுமார் 30 நிமிட நேரத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் மீட்டதை அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.