ரூ. 2 ஆயிரம் நிவாரணம் எம்எல்ஏ டோக்கன் விநியோகம்
அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரூ. 2 ஆயிரம் கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன்களை எம்எல்ஏ இளங்கோ வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். கொரோனா நிவாரண நிதியாக இந்த மாதம் ரூ. 2 ஆயிரம் வழங கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த தொகை வழங்குவதற்கான டோக்கன் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ இளங்கோ இன்று அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண உதவித் தொகை பெறுவதற்கான டோக்கன்களை வழங்கினர
மேலும் அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடை உரிமையாளர்களிடம் மாஸ்க் அணிந்து சனிடைசர் பயன்படுத்தி கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தமிழக அரசு அறிவித்த கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வலியுறுத்தினார்.
தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி, தென்னிலை, கா.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.