கரூரில் எரிபொருள் விலை உயர்வு : சிலிண்டர், வாகனத்துக்கு மாலை அணிவித்து கண்டனம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து டூவீலர், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-07-11 13:15 GMT

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மாலை அணிவித்து போராட்டம்.

  நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் அடுத்த ராயனூர் பேருந்து நிறுத்தம் முன்பாக கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், அதிகரித்து வரும் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் எனவும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது இருசக்கர வாகனம் மற்றும் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News