பரமத்தி, தென்னிலையில் மழை மக்கள் உற்சாகம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, க பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் கரூர் மாவட்டம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலை நிலவி வருகிறது பொதுமக்கள் பகல் வேளையிலும் இரவு வேளையிலும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் வெயிலில் தாக்கத்தால் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை அரவக்குறிச்சி, க. பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை மேகம் கறுத்து குளிர்ந்த காற்று வீசியது.
தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சுற்றுப்புற வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்த திடீர் மழையால் நிம்மதியடைந்தனர்.