ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

வேலாயுதம்பாளையத்தில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-11-19 17:00 GMT

பைல் படம்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர்,  நாகராஜன் தலைமையில்  போலீசார் புகழூர் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் புன்னம்சத்திரம் அருகே பெரிய ரங்கபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (46) என்பதும் அவர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதும் தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து அவரது வீட்டை சோதனை செய்தனர். அதில் அங்கிருந்த 1 1/2 கிலோ கஞ்சா, 2 பைக்குகள், ஒரு மொபைல்போன், பணம் ரூ. 25 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News