பள்ளப்பட்டி நகராட்சியில் பட்டியலினத்தவருக்கு ஒன்றுக்கூட இல்லை

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி வார்டு ஒதுக்கீட்டில் பட்டியலின மக்களுக்கு ஒரு வார்டு கூட ஒதுக்கப்படவில்லை;

Update: 2022-01-30 16:39 GMT

பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம் 

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பேரூராட்சி அண்மையில் பள்ளப்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் வார்டு வரையறை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 27 வார்டுகளில் பொதுப்பிரிவு பெண்களுக்கு 14 வார்டுகள் ஒதுக்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பட்டியிலின மக்களுக்கு 1 வார்டு கூட ஒதுக்கப்படவில்லை.

பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்த போது 18-வார்டில், ஒரு வார்டு பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 28 நகராட்சிகளில் பள்ளப்பட்டி நகராட்சியில் மட்டுமே பட்டியலின மக்களுக்கு வார்டு ஒதுக்கப்படவில்லை.

Tags:    

Similar News