கரூர் வார் ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களின் குறைகள் கேட்டறிந்தார்

கரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வார்ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொரோனா தொடர்பான உதவிகளை கேட்டறிந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2021-05-24 12:45 GMT

கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வார்ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொரோனா குறைகளை கேட்டறிந்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை அளிப்பதற்கும், வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ள இந்த வார் ரூமில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்

பொதுமக்கள் அழைத்த தொலைபேசியை எடுத்து பேசி அவர்களின். தேவையை கேட்டறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய உதவகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், தனது செந்தில் பாலாஜி பவுண்டேசன் சார்பில் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 டன் கபசுர குடிநீர் பொடியை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கினார்


Tags:    

Similar News