கரூரை குளிர்வித்த மழை... சூரியனின் சூடு தணிந்தது!

கரூர் மாவட்டத்தில் இன்று பரவலாக பெய்த மழையால், கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Update: 2021-04-27 08:49 GMT

கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பநிலை நிலவியது. கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதி தமிழக அளவில் அதிக வெப்பநிலை நிலவும் பகுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த பகுதியில் அதிக அளவில் கல்குவாரிகள் உள்ளதால், பூமியிலிருந்து வெப்ப அதிக அளவில் வெளியேறி உயர்ந்த பட்ச வெப்பநிலை நிலவியது.

கரூர் மாவட்டம் முழுவதும் நிலவிய கோடை வெப்பத்தால், குழந்தைகள், வயதானவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர் மதிய வேளையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோடை வெப்பத்தை தணிக்க மழை பெய்யாதா என்று பலரும் ஏங்கிக் கிடந்தனர்.

இந்நிலையில், இன்று காலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன; சற்று நேரத்தில் மழை பொழிய ஆரம்பித்தது கரூர் நகரம், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.

இதனால் கடந்த சில தினங்களாக நிலவிவந்த வெப்பமான சூழ்நிலை குறைந்து,  குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News