இந்து அன்னையர் முன்னணியினர் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம்
திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளக்கேற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
வேலாயுதம்பாளையம் சக்தி நகர் பகுதியில், கரூர் மேற்கு ஒன்றியம் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டி விளக்கேற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் பரிமளா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளக்கேற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.