மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஓட்டம்; மாட்டு வண்டிகள் பறிமுதல்

அமராவதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்; 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-08-23 17:53 GMT

பைல் படம்.

கரூர் மாவட்டம்,  சின்னதாராபுரம் அருகே வெங்கல்பட்டில் என்ற இடத்தில் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளப்படுவதால் அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.   

தகவலின்பேரில் ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர்,  இது குறித்து சின்னதாராபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அமராவதி ஆற்றுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடினர்.

பின்னர், சட்டவிரோதமாக மணல் அள்ளிய பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகளை சின்னதாராபுரம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News