கொரோனா பரவலால் கரூர் மாவட்டம் முழுவதும் களையிழந்த ஆடி 18 பண்டிகை

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக காவிரியில் ஆடி 18 கொண்டாட தடையால் பொதுமக்கள் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.

Update: 2021-08-03 11:49 GMT

முளைப்பாரியை ஆற்றில் விடும் பெண்கள்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்து விதமாக கரூரில், ஆடி18 பண்டிகையை காவிரி கரையில் கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று கரையாரம் பொதுமக்கள் அதிக அளவில் சென்று வழிபடும், வாங்கல், மாயனூர் , உள்ளிட்ட பகுதிகளில் பேரிகார்டு அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி ஆற்றிலும், கரையோரத்தில் உள்ள ஆலயங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் இல்லாமல் மக்களை காப்பாற்ற வேண்டும் என காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்து வழிபாடு மேற்கொள்வது வழக்கம். ஆண்டுதோறும், கரூர், மாவட்டத்தில் உள்ள வாங்கல், நெரூர், மாயனூர், திருமுக்கூடலூர், போன்ற இடங்களில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் அதிக அளவு கூடுவார்கள்.

கொரோனா மூன்றாவது அலை பரவலை தடுக்க ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆடிப்பெருக்கு நாளான இன்று காவிரி கரையில. பொதுமக்கள் கூடி ஆடி 18 பண்டிகையை கொண்டாடி நீர்நிலைகளை வழிபட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.  காவிரி கரையோர பகுதியில் பேரி கார்டு அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு சில பொதுமக்கள் வீட்டில் வைத்திருந்த முளைப்பாரியை எடுத்து சென்று காவிரி ஆற்றில் விட்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News