கரூரில் 8 இடங்களில் சோதனை சாவடி கண்காணிப்பு தீவிரம்
கரூர் மாவட்ட எல்லையாக உள்ள 8 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் செய்தியாளர்களிடம் கூறினார்.;
கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு முழு வீச்சில் அமல்படுத்துவதற்காக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர்.
கரூர் மாவட்ட எல்லை வாங்கலில் உள்ள சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனங்களை நிறுத்தி உரிய இ பதிவு உள்ள நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதை கண்காணித்தார்.
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கரூர் மாவட்ட எல்லையாக உள்ள 8 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தலா ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து கரூருக்கு வருபவர்கள் தணிக்கை செய்யப்படுகின்றனர். உரிய இ பதிவு உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
தேவையில்மால் வீட்டை விட்டு வெளியில் வந்து சுற்றிக் கொண்டுள்ள நபர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த 12 ம் தேதி முதல் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாத நபர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு ரூ. லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 130 இரு சக்கர வாகனங்கள் 16 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.