கரூர் காகித ஆலையில் நிலக்கரி கொள்முதல் ஊழல்: இருவர் பணியிடை நீக்கம்

கரூரில் உள்ள காகித ஆலையில் நிலக்கரி வாங்கியதில் முறைகேடு முதன்மை பொது மேலாளர் உள்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம்.

Update: 2021-07-31 15:23 GMT

 நிலக்கரி வாங்கியதில் முறைகேடு செய்தது தொடர்பாக  கரூர்  தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை முதன்மை பொது மேலாளர் உள்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் பணிபுரியும் பாலசுப்ரமணி (முதன்மை பொது மேலாளர்- வணிகம், மின்சாரம் மற்றும் கருவியியல்) மற்றும் பாலகிருஷ்ணன் (ஆய்வுக்கூடம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறை,மேலாளர்) ஆகியோர்கள் காகித ஆலை நிறுவனத்திற்கு நிலக்கரி வாங்கியதில்  முறைகேடு செய்ததாக புகார் வந்ததன் பேரில், ஆலையின் செயல் இயக்குநர் கிருஷ்ணன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News