கரூரில் குடிநீர் இணைப்பு கேட்டு பெண்கள் சாலை மறியல் பாேராட்டம்

காதப்பாறை ஊராட்சியில் குடிநீர் இணைப்பு கோரி டெபாசிட் செலுத்தி 6 மாதம் கடந்தும் இணைப்பு வழங்காததால் பெண்கள் சாலை மறியல்.

Update: 2021-08-17 10:14 GMT

குடிநீர் இணைப்பு வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

கரூர் அருகே பொதுமக்கள் குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகை கட்டி 6 மாத காலமாகியும் இணைப்பு வழங்கப்படவில்லை என கூறி ஊராட்சி கண்டித்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காதப்பாறை ஊராட்சியில் வசிக்கும் தரணி நகர், முத்து நகர், கணபதி நகர் பகுதியை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இணைப்பு கோரி, ஆறு மாதத்திற்கு முன்பு டெபாசிட் தொகை கட்டியுள்ளனர்.

டெபாசிட் தொகை கட்டிய பிறகும் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்து சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வந்த வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி குடிநீர் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News