அப்துல் கலாம் பிறந்த நாள்: கரூரில் தோகை கலாம் நற்பணி மன்றத்தினர் மருத்துவ முகாம்
அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி தோகை கலாம் நற்பணி மன்றம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.;
அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தோகை கலாம் நற்பணி மன்றத்தினர் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தினர்.
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் தோகை கலாம் நற்பணி மன்றத்தினர், அப்துல் கலாமின் 90வது பிறந்த நாளையொட்டி முன்னிட்டு இன்று மாபெரும் மருத்துவ முகாமை நடத்தினார்.
இந்த மருத்துவ முகாமில் வாசன் கண் மருத்துவமனை, ஐ டூத் பல் மருத்துவமனை மற்றும் துளசி பார்மசி இணைந்து கண் பரிசோதனை, பல் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை போன்ற பரிசோதனைகள் இலவசமாக ஏழை எளிய மக்களுக்காக வழங்கினர்.
முன்னதாக கடந்த ஒரு வருட காலமாக, கொரோனா காலகட்டத்தில் தோகை கலாம் நற்பணி மன்றத்தினர், 5 ஆயிரம் பேர்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல், மயானத்திற்கு செல்லும் வழியினை சீரமைத்தல், 10,000 பனை விதைகளை நடுதல் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக. கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு சேவைகளுக்கு கரூர் மாவட்டத்திள்ள அணைத்து அறக்கட்டளைகளுக்கும், ஒரு முன்னோடி அறக்கட்டளையாக திகழ்ந்து வருகிறது "தோகை கலாம் நற்பணி மன்றம்".