பதுக்கிய மது பாட்டில்கள் - பறிமுதல்.

ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக..

Update: 2021-05-15 03:10 GMT

ஊரடங்கு காலத்தில் விற்பதற்காக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த 10 நபர்களை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 1,998 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது இதன் காரணத்தால் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதற்காக யாரேனும் மது பாட்டில்களை அதிக அளவில் வாங்கி பதுக்கி வைத்துள்ளனரா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில்,  கரூர் மாவட்டம் முழுவதும் ரகசிய தகவலின் அடிப்படையில் அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்த 10 நபர்களை கைது செய்து , அவர்களிடமிருந்து 1,998 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

குறிப்பாக வெங்கமேடு காவல் நிலையப் பகுதியில்,அருகம்பாளையம் என்ற இடத்தில் முருகேசன் என்பவருடைய வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 1,714 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு முருகேசன் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News