வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் ஆர்த்தி
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் உத்திரமேரூர் , வாலாஜாபாத் , ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் துணை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாகவே மாவட்ட ஆட்சியர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை பதிவேடு சரிபார்ப்பு , உள் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மகப்பேறு பிரிவு மற்றும் ஆய்வகங்கள் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.
துணை மருத்துவமனைகளுக்கு வரும் கிராமப்புற மக்களுக்கு சுகாதார குறித்து வழிகாட்டுதலும் தரமான சிகிச்சைகளும அளிக்க வேண்டும் எனவும் மேல் சிகிச்சைக்கு முறையான மருத்துவமனைக்கு சிபாரிசு செய்து உடல் நலம் காக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறிவுரை வழங்கினார்.