திரைப்பட பாணியில் சேலஞ்ச் வாக்களித்த பெண் வாக்காளர்
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கடிவக்கம் கிராமத்தில் திரைப்பட பாணியில் பெண் வாக்காளர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 3 ஓன்றியங்களுக்கு முதல் கட்டமாக இன்று நடைபெற்றது. இதில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் வாக்களிக்க துவங்கினர்.
இந்நிலையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ட்பட்டது சிங்காடிவாக்கம் கிராமம். இங்கு 665 ஆண் வாக்காளர்களும் , 724 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1389 வாக்காளர்கள் உள்ளனர்.
இங்குள்ள 5வது வார்டு பகுதியான பள்ளத் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மகள் பார்வதி கடந்த வருடங்களுக்கு முன் உத்திரமேரூர் பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.
இவரது வாக்காளர் அடையாள அட்டை இன்னும் தனது கணவர் ஊருக்கு மாற்றப்படாத நிலையில் இன்று சிங்கடிவக்கம் பள்ளியில் வாக்களிக்க வந்த போது இவரது வாக்கை ஏற்கனவே அளித்துவிட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதில் ஆச்சரியம் அடைந்த பார்வதி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னுடைய வாக்கை வேறு ஒருவர் கள்ளத்தனமாக செலுத்தியுள்ளதை கண்டு சினிமா திரைப்படத்தில் நடிகர் விஜய் தனது ஓட்டை செலுத்த வந்தபோது ஏற்கனவே எழுதி இருப்பது கண்டு சேலஞ்ச் ஓட்டு கேட்டு தேர்தல் அலுவலரிடம் கூறியது நினைவுக்கு வந்து அதேபோல் தேர்தல் அலுவலரிடம் பார்வதி கேட்டுள்ளார்.
சற்று நேரம் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக்கு பின் ரூபாய் 2 பெற்றுக்கண்டு சேலஞ்ச் வாக்களிக்க அவருக்கு அனுமதி அளித்துள்ளனர். இச்ம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.