புதையுண்ட வட மாநில வாலிபரை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது

வாலாஜாபாத் அருகே கல்குவாரியில் மண்சரிவில் சிக்கி கொண்ட வடமாநில தொழிலாளரை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது

Update: 2021-06-09 06:00 GMT

வாலாஜாபாத் அருகே கிராமத்தில் கல்குவாரியில் மண்சரிவில் சிக்கி கொண்ட வடமாநில தொழிலாளரை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பட்டா கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரி தொழிற்சாலையில் மண்சரிவில் சிக்கி இரு வடமாநில தொழிலாளர்கள் புதையுண்டனர்.

இவர்களை தேடும் பணி நேற்று துவங்கிய நிலையில் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டார். மற்றொருவரை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்று நான்கு கனரக மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு தேடும் பணி தீவிரமும் பட்டுள்ளது. இப்பணிகளை‌காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி உடன் இருந்து ஆலோசனைகள் வழங்கி வருகின்றார்.

அப்பகுதியில் சாலவாக்கம் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

#Instanews #Tamilnadu #Kanchipuram #Uthiramerur #WorkerTrapped #landslide #Quarry #Searching #SecondDay #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #காஞ்சிபுரம் #உத்திரமேரூர் #குவாரி #மண்சரிவு #தொழிலாளி #தேடுதல் #தீவிரம்

Tags:    

Similar News