உத்திரமேரூர் அருகே ரூ.60 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
உத்திரமேரூர் வட்டம் , வெங்கச்சேரி கிராமத்தில் புன்செய் அனாதீனம் நிலம் 20 ஏக்கர் அரசு நிலம் 30மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமிரத்திருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அரசு நிலங்களை மீட்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை மீட்டு வருகிறது.
அவ்வகையில் உத்திரமேரூர் அடுத்த வெங்கச்சேரி கிராமத்தில் அரசு நஞ்சை அனாதீனம் நிலம் 30-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு அதை மீட்கும் பணியினை வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் உத்தரமேரூர் வட்டாட்சியர் குணசேகரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் காவல் துறை பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு விவசாய நிலத்தை மீட்டனர்.
20ஏக்கர் நிலத்தை மீட்ட பின்பு அங்கு அரசு அறிவிப்பு பலகையை நட்டு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் எச்சரிக்கை செய்து பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தின் அரசு மதிப்பு சுமார் 60 லட்சம் என தெரிய வருகிறது.