பேருந்து நிலையங்களை ஆக்கிரமிக்கும் கட்சி வாகனங்கள்: பொது மக்கள் அவதி

உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகிலேயே தேர்தல் பரப்புரை நடைபெறுவதால், பேருந்துநிலையத்தில் பிரமுகரின் கார்கள் நிறுத்தப்படுவதால் பேருந்து சேவை முற்றிலும் தடைப்பட்டு பயணிகள் அவதியுறுகின்றனர்.

Update: 2021-03-25 10:42 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது .உத்தரமேரூர் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள் தோறும் தங்கள் தேவைகளுக்காக உத்திரமேரூர் நகருக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை நடைபெற்று வருவதால் உத்திரமேரூர் பேருந்து நிலையம் எதிரே கடந்த சில நாட்களாகவே கட்சிதலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அப்பகுதியில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் வருவதற்கு பெரும் சிரமம் ஏற்படுவதும், கட்சிப் பிரமுகர்களின் வருகை பேருந்து நிலைய வழியாக மேடைக்கு வர காவல் துறை அறிவுறுத்தியதாலும், கட்சி பிரமுகரின் கார் அனைத்தும் பேருந்து நிலையத்தின் உட்புறம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பயணிகள் கடை உரிமையாளர்கள் என பல தரப்பினரும் பெருத்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இனிவரும் காலங்களில் பேருந்து நிலையத்தை தவிர்த்து மற்ற இடங்களில் பரப்புரை செய்ய காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News