உத்திரமேரூர் அரசு நெல் கிடங்கில் காத்துக் கிடக்கும் லாரிகள்
கடந்த 10 நாட்களாக உத்திரமேரூர் அருகே மொத்த நெல் இருப்பு கிடங்கில் 60க்கும் மேற்பட்ட லாரிகளிலிருந்து நெல் இறக்காமல் உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுதும் கிராமங்களில் செயல்பட்டுவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இங்கு வைக்கப்படுவது வழக்கம்.
தற்போது 60 லாரிகளில் கொண்டு வரப்பட்ட நெல் நெல் மூட்டைகள் இறக்கப்படாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி ஓட்டுனர்கள் அவர்கள் உதவியாளர்கள் என பல பேர் நாள்தோறும் காத்து கிடக்கும் அவல நிலையும் தற்போது ஊரடங்கு நிலையில் உணவு கிடைக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் இந்த லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகளை இறங்கினால் மட்டுமே கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு சென்று அங்கு கொள்முதல் செய்யுப்பட்ட நெல் மீண்டும் இங்கு வரும்.
தற்போது பருவ மழை காலம் என்பதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே அரசு இவ்விஷயத்தில் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.