உத்தரமேரூர் : நாளை பொது போக்குவரத்து துவங்கவுள்ள நிலையில் அரசு பேருந்துகளை இயக்க தயார் நிலையில் உள்ளது
நாளை முதல் 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்து 50சதவீத பயணிகளுடன் துவங்கவுள்ளதால் அரசு பேருந்துகளின் பராமரிப்பு பணி நிறைவு பெற்று பணிமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.;
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மேலும் சில தளர்வு களுடன் புதிய உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளார்.
அதன்படி தொற்று குறைவு உள்ள சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு தொழில் சார்ந்த கடைகளுக்கு கூடுதலாக இரண்டு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளித்து பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் , குளிர்சாதன வசதி பயன்படுத்தாமல் பேருந்துகளை இயக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு பேருந்துகளை இயக்க நேற்று முதல் சுத்தம் செய்தல் பணிகளையும் வாகன பராமரிப்புகளையும் தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இயங்கும் 30 பேருந்துகளின் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டு , டயர் , இன்ஜின் ஆகியவைகளை தொழில்நுட்ப பணியாளர்கள் சோதனை மேற்கொண்டு , வழிகாட்டு நெறிமுறை பிரசுரங்கள் ஓட்டப்பட்டு, நாளை காலை முதல் மக்களின் சேவைக்காக தயார் நிலையில் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளதாக மேலாளர் தெரிவித்தார்.