காஞ்சிபுரம்: கிராமத்தில் உள்ள பனை மரங்களை வெட்ட இளைஞர்கள் எதிர்ப்பு!

காஞ்சிபுரம் அடுத்த சிங்கடிவக்கம் கிராமத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு கிராம இளைஞர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.;

Update: 2021-06-03 07:30 GMT

பனை மரங்களை வெட்டி வாகனங்களில் ஏற்றியதை காணலாம்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் ஒன்றியதுக்கு உட்பட்டது சிங்காடிவாக்கம் கிராமம். இன்று காலை  அதே கிராம சார்ந்த ஒருசிலர் பனை மரங்களை மர விபாரிகளிடம் ஒரு பனைமரம் 50 ரூபாய் என்று விற்பனை செய்துக்கொண்டு இருந்தனர் .

இதனை அறிந்த அந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் அப்துல்கலாம் மக்கள் சேவை மன்ற இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று  மரம் வெட்டிக்கொண்டு இருந்த மரம் வாங்கும் விபாரிகளை  தடுத்து நிறுத்தினர்.

பிறகு கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர்  சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். மரம் வாங்கும் மர விபாரிகளை சுற்றி உள்ள எந்த கிராமங்களிலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள் தவிர்த்து எந்த மரங்களையும் வாங்க கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தார்.

பாரம்பரியம் மிக்க பனை மரத்தை பாதுகாக்க மாவட்ட ஆட்சியார்  தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி அப்துல்கலாம் மக்கள் சேவை மன்றத்தின் சார்பில் கோரிக்கை வைக்க

Tags:    

Similar News