காஞ்சிபுரம் அருகே பூசிவாக்கம் ஊராட்சியில் மூன்று பள்ளி செல்லா குழந்தைகள் மீட்பு

பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்ற போது கண்டுபிடிக்கபட்டது.

Update: 2023-03-12 13:15 GMT

பூசிவாக்கம் கிராம ஊராட்சியில் பள்ளி செல்லா மூன்று குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்வி இடை நிற்றல்  குழந்தைகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  அறிவுறுத்தி இருந்தார். மேலும், பாதுகாப்பு இல்லாத குழந்தைகள் குறித்தும் கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டு இரு ந்தது.

அந்த வகையில், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசிவாக்கம் கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மேற்கொண்ட களப்பணியின் போது பள்ளி செல்லா குழந்தைகள் 3 பேர் மீட்கப்பட்டு கல்வி பயிலும் வகையில் காப்பாற்று ஒப்படைக்கப்பட்டனர்.

பூசிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் லெனின் குமார், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி, ஆசிரியர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு களப்பணியாளர் சுசிலா மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அபினேஷ் ஆகியோர் பூசிவாக்கம் கிராமம் முழுவதும் சுற்றி,  பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டனர்.

இதில் பூசிவாக்கத்தை சேர்ந்த பூபதி திம்மராஜாம்பேட்டை பகுதியில் தாயை இழந்து பாதுகாப்பற்ற திறந்தவெளி தற்காலிக குடிசை அமைத்து வசித்து வந்த சின்னராசு ,  வள்ளி ஆகியவை கண்டறிந்து மீட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரின் விவரங்கள் முழுவதும் சேகரிக்கப்பட்டு இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு இக்குழுவின தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் இவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர சிறுமி வள்ளியை காஞ்சிபுரம் திருவள்ளூர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கும், சிறுவர்கள் இருவரையும் செங்கல்பட்டு அருகே உள்ள பழத்தோட்டம் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கும் அனுப்பி வைத்து இது குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட  அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் குறிப்பாக இருளர் நரிக்குறவர் இன மக்களின் குழந்தைகள் கல்வி  குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இதில் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மானாம்பதி பகுதியில் வசித்து வந்த நரிக்குறவர் என மாணவ மாணவிகள் 9 பேர் கல்வி இடைநிற்றல் குறித்துக் கண்டறியப்பட்டு அவர்கள் கல்வி நிலைக்கு ஏற்ப பல்வேறு அரசு பள்ளிகளில் கல்வி தொடர மீண்டும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News