காஞ்சிபுரம்: 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

Update: 2021-06-15 05:01 GMT

காஞ்சிபுரம் அரிசி அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசு  தொடங்கி வைத்தார்.

தமிழக சார்பில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக இன்று முதல் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கி துவக்கி வைத்தார்.

மாவட்டம் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 60 ஆயிரத்து 309 குடும்ப அட்டைகளுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளதாகவும் இன்று இதனை துவக்கி வைத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.சுமார் 300 நபர்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி திட்டத்தில் 78 லட்சம் மதிப்பில் காசோலைகளும் ஒரு கோடியே 17 லட்சத்து 35 ஆயிரத்து 922 ரூபாய் மதிப்பிலான தங்கம் வழங்கினார்

இதேபோல் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு திட்டத்தில் 52 நபர்களுக்கு தையல் இயந்திரங்களையும் , 30 திருநங்கைகளுக்கு ரூபாய் 2000 கொரோனா நிவாரண நிதியையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப் பெருந்தகை கலந்து கொண்டனர்கலந்து கொண்டனர்

Tags:    

Similar News