காஞ்சிபுரம் அருகே மனைவியை தீர்த்து கட்டிய கணவன், அடுத்த செய்த திடீர் சம்பவம்
காஞ்சிபுரம் அருகே விடுதியில் தங்கி வேலை செய்து வரும் மனைவியை, விடுதியிலேயே கணவர் படுககொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகா தென்காசி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி அனு(21) சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
வாலாஜாபாத் அடுத்த வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். இவர்களுக்கு 8வயதில் குழந்தை உள்ளது.
இவரைப் பார்ப்பதற்காக திருநெல்வேலியிலிருந்து பாலமுருகன் இன்று விடுதிக்கு வந்து அனுவுடன் பேசிக்கண்டிருந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலமுருகன் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அனுவின் கழுத்தை அறுத்து விடுகிறார்.
சரிந்து விழுந்த அனு சம்பவ இடத்திலேயே பலியானதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் அனுவை அறுத்த கத்தியால் தனக்கு தானே வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம் பரிந்து உடன் இருந்தவர்கள் வாலாஜாபாத் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர் அதனடப்படையில் இறந்த அணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலமுருகனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.