விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

காஞ்சிபுரம் அடுத்த தச்சூரில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2021-04-30 03:35 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், விச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். பால் வியாபாரி. கடந்த வாரம் செங்கல்பட்டு பகுதிக்கு  சென்றபோது,  வாகன விபத்தில் சிக்கினார். 

விபத்தில் சிக்கியவரை மீட்ட உறவினர்கள், சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து,  சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று காலை உடல் நிலை மோசமானது. இதைக்கண்டு,  அவரது உடல் உறுப்பை தானம் செய்ய முடிவு செய்து உறவினர்கள், கண்,  இதயம் உள்ளிட்ட ஆரோக்கியமான நிலையிலுள்ள உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவமனைக்கு அனுமதி அளித்தனர்.

இதனிடையே, அன்று மாலையே சிகிச்சை பலனின்றி வேலாயுதம் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. பலருக்கு முன் உதாரணமாக உடல் உறுப்பு தானம் செய்த உறவினர்களின் செயலை பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News