மகளிர் தின விழாவில் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசு
இளையனார்வேலூர் கிராமத்தில் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் மகளிர் தினம் கொண்டாடினர்.;

போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசு வழங்கப்பட்டது.
உலகம் முழுதும் கடந்த மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நாளில் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மகளிர் தின விழாவை இன்று கொண்டாடினர்.
இவ்விழாவினை காஞ்சிபுரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் திவ்யபிரியா இளமது துவக்கி வைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் செயல்பட வேண்டிய விதம் மற்றும் மகளிர் பாதுகாப்பு, குழந்தை திருமணம் , சைல்டு ஹெல்ப் லைன் எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சுய உதவிக்குழு மகளிர்கள் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
இவர்களுக்கு இளையனார் வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன் பரிசுகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களையும் , சிறந்த மகளிர் சுய உதவி குழுவாக திகழ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் துணைத்தலைவர் ஜெயசுந்தரி , வார்டு உறுப்பினர் கன்னியம்மாள், வட்டார மகளிர் ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி, கலைவாணி , ரஞ்சினி மற்றும் கிராம பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.