கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு TNPSC இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்.
ஆர்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளது.;
ஆர்ப்பாக்கம் மகளிர் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழாவில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய வணிக வரித்துறை அலுவலர் கணபதி
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்துள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ காஞ்சி மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் மாணவிகள் கல்லூரி நாட்களிலே பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு அரசு வேலையில் இணையும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்த நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டது
இங்கு டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி துவக்க விழா கல்லூரியின் தாளாளர் முனைவர் அ. சுப்ரமணியம் தலைமையிலும் கல்லூரியின் முதல்வர் கவிதா முன்னிலையிலும் நடைபெற்றது. அக்கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் அருண்பாண்டியன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலக வணிகவரித்துறை அலுவலர் கணபதி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலக கூட்டுறவுத் துறை அலுவலர் சங்கர், ஓம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சாம்சங் ஆகியோர் கலந்துகொண்டு அரசுத்துறை வேலைகள் பற்றிய முக்கியத்துவம் குறித்தும் அதற்கான போட்டி தேர்வுகளில் எவ்வாறு பங்கேற்பது என்பது குறித்தும் மாணவர்களுக்கு அனைவரும் எடுத்துரைத்தனர்.
இதில் ஏராளமான மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரியின் உதவி பேராசிரியர் முனைவர் ரவி நன்றி கூறினார்.