உத்திரமேரூர் : கணவன் மனைவி இருவரும் வெற்றி

உத்திரமேரூர் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கணவன் 15 வார்டிலும் , மனைவி 11 வார்டில் என இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.;

Update: 2022-02-22 13:00 GMT

உத்திரமேரூர் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கணவன் மனைவி சான்றிதழ் பெற்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18-வார்டு களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக 14 இடங்களிலும் ,  பாமக ஒரு இடத்திலும் ,  அதிமுக மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது.

இவர்களில், 15வது வார்டில் போட்டியிட்ட சசிகுமார் மற்றும் 11 வது வார்டில் போட்டியிட்ட கவிதா சசிகுமாரும் வெற்றி பெற்றுள்ளனர். சசிகுமார் 14 வாக்குகள் வித்தியாசத்திலும் ,  மனைவி கவிதாஞ்சலி குமார் 211 வாகனங்கள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து உள்ளனர்.

Tags:    

Similar News