உத்தரமேரூர் : அம்மா மினி கிளினிக் மூடல் ??

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அம்மா மினி கிளினிக் அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்கள் மருத்துவ சேவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Update: 2021-06-17 11:42 GMT

பொதுமக்கள் மருத்துவ சேவைக்காக நெடுந்தூரம் செல்ல உள்ள நிலையை போக்க 5க்கும் மேற்பட்ட கிராமங்களை ஓருங்கிணைத்து கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் எனும் திட்டம் துவக்கப்பட்டது. இந்த கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஓர் உதவியாளர் பணியில் இருப்பர். ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹூமோகுளோபின், சிறுநீர் பரிசோதனைகள், சளி, காய்ச்சல் உள்ளிட்டவைக்கு சிகிச்சை மற்றும் மருந்துகளை, பொதுமக்கள் இலவசமாக பெற்றுச் செல்லலாம்.

காலை 8 முதல் மாலை 3 மணி வரை செயல்பட்டு வரும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 இடங்களில் அம்மா மினி கிளினிக் டிசம்பர் முதல் செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் இதில் பணிபுரிந்த மருத்துவர்கள் செவிலியர்கள் என பலர் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது முழுமையாக இந்த மினி கிளினிக் மூடப்பட்டுள்ளது.

தற்போது கிராமங்களில் செயல்பட்டு வந்த இந்த கிளினிக் மூடப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ சேவைக்கு நகரங்களையே நாட வேண்டியுள்ளது அல்லது அருகிலுள்ள கிராமங்களில் செயல்படும் மருந்தகங்களில் மருந்துகள் வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமங்களில் பெரிதளவு வரவேற்கப்பட்ட இந்த திட்டம் தற்போது மூடப்பட்டுள்ளது என்ன காரணம் தெரியவில்லை   என்ற மக்கள் கூறுகின்றனர். 



Tags:    

Similar News