கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி, அதிர்ச்சி தகவல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரியின் 3வது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-07-23 11:30 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் , அம்பத்தூர்புதூர்,  , சிவசண்முகம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாளி. இவரது மக்கள் தென்கலம் அருகே உள்ள சபிதா மருத்துவக் கல்லூரியில் BSc, Hons.Helath Science முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று 2வது தேர்வுப் பருவத்தில் ஐந்தாம் நாள் தேர்வான மருத்துவ இயற்பியல் தேர்வு எழுதி கொண்டிருந்த போது தேர்வு கண்காணிப்பாளர் மாணவர்களை கண்காணித்து கொண்டிருந்தபோது சபிதா மொபைல் போன் வைத்திருந்ததாக கூறி அவரை வெளியே நிறுத்தி உள்ளார்.

இதனால் அவமானமடைந்த சபிதா ஏழாவது மாடியில் இருந்து மூன்றாவது மாடிக்கு கீழே வந்து அங்கிருந்து எகிறி குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்வு அறையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறை அங்கிருந்த மாணவர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News