ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத் தொழிலாளர்களுடன் கலெக்டர், எஸ்.பி. கலந்துரையாடல்

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-08 14:00 GMT

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,  எஸ். பி. சுதாகர் உள்ளிட்டோர் உரையாற்றியனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் சிப்காட் தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் கலந்துரையாடினர். அவர்களின் நலன், இருப்பிட வசதி, பாதுகாப்பு பற்றியும் கேட்டறிந்து, அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் மற்றும் குறைகளை இருந்தால் தெரிவிக்குமாறும் அவர்கள் கூறினர்.

மேலும், தங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்போது அல்லது உதவிகள் தேவை இருப்பின் காவல்துறை உதவி எண்ணையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று வெளி மாநிலத் தொழிலாளர்களிடம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்,

பின்பு, காவல் உதவி செயலி-யை தங்களுடைய கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும், தங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்போது இந்த காவல் உதவி செயலி-யை உபயோகப்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்களிடம் தெரிவித்தார்.

கலந்தாய்வு கூட்டம்:

இதேபோல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர், வடமாநில தொழிலாளர்களின் நலன் தொடர்பாக கம்பெனி மேலாளர்கள், ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரவுவதை தொடர்ந்து அதனை தடுக்கும்பொருட்டும், வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும்விதமாக மாவட்ட காவல்துறை மற்றும் Confederation of Indian Industries இணைந்து இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பெரும்புதூரில் உள்ள இராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு திடலில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா சுதாகர் , காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாரம், காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், காவல் ஆய்வாளர் நிவாசன், புகழேந்தி, CII மற்றும் தொழிற்சாலைகளைச் சேர்ந்த சுமார் 150 மனிதவள மேலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பேசியதாவது:

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தொழிலாளர் பிரச்சனை மற்றும் அவர்களுடைய சம்பளப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும், பகல் மற்றும் இரவு ரோந்து மேற்கொள்ளும்போது வடஇந்தியர்களுடன் கலந்து உரையாட வேண்டும்.

ஊழியர்களின் சம்பள பட்டியலில் வருங்கால வைப்பு நிதி இடம்பெறுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும், இந்தியர்களின் நலனை உறுதி செய்வதற்கு வட வட இந்தியர்களுடன் தொடர்பை மேம்படுத்த ஒவ்வொரு நிறுவனங்களிலும் தனியாக ஒரு மனிதவள மேலாளரை நியமிக்க வேண்டும்.

காவல்துறை உதவி எண்களை கொண்ட சுவரொட்டி பிளக்ஸ் போர்டுகளை வைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை கணக்கெடுத்து அந்த விவரத்தை பராமரிக்க வேண்டும். வெளிமாநில பணியாளர்களை தக்க பாதுகாப்புடன் குடியமர்த்தி அவர்களிடையே ஏற்படும் அச்சங்களை அகற்ற வேண்டும் என்றவாறு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா மற்றும் அரசு அலுவலர்கள், புலன் பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News