ஸ்ரீபெரும்புதூரில் பாலியல் தொழிலுக்கு பெண்ணை விற்பதில் தகராறு : வாலிபர் கொன்று புதைப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே பாலியல் தொழிலுக்கு பெண்ணை விற்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக. வடமாநில வாலிபர் கொன்று புதைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் இஸ்ரேல்சகால். இவர் அடிக்கடி தமிழகம் வந்து சில மாதங்கள் வேலை பார்த்துவிட்டு மீண்டும் ஒடிசாவுக்கு திரும்புவது வழக்கம். அக்காலங்களில் அப்பகுதியில் இருக்கும் பெண்களிடம் நயவஞ்சகமாக பேசி அவர்களை பாலியல் தொழில் செய்பவர்களிடம் விற்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
அவ்வகையில் கடந்த 15ஆம் தேதி ராணிப்பேட்டையில் ஜோதிமணி உணவகத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்குவந்த அவருடைய நண்பர் குருதேவ் இவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு மேவலுர்குப்பம் ஏரிக்கரையில் அருகே உள்ள தனி வீட்டுக்கு சென்று உள்ளார்.
அந்த வீட்டில் ஏற்கனவே மேற்கு வங்கத்தை சேர்ந்த திப்பு என்பவர் சில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். இது தொடர்பான வழக்கும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் திப்பு பெயரில் உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல்சகால் உடன் வந்த பெண்ணை விற்பனை செய்வது தொடர்பாக இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
திப்பு நண்பர்களான படூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ் , ஜெயக்குமார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இணைந்து இஸ்ரேல் சகாவை அடித்து கொலை செய்து கிருஷ்ணா கால்வாய் ஓரம் புதைத்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் சகால் தம்பி நசீருதீன்சகால் எனது அண்ணனை காணவில்லை என ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அதில் அவரது செல்போன் உதவி கொண்டு குருதேவை கைது செய்து அதன் விசாரணையில் இவ்விஷயம் வெளியே வந்துள்ளது.
புதைக்கப்பட்ட இஸ்ரவேல்சகால் உடலை இரு மாவட்ட காவல்துறை உதவியுடன் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை மருத்துவர் முன்னிலையில் இன்று அல்லது நாளை தோண்டப்பட உள்ளது. இது தொடர்பாக இதுவரை 4 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.