ஒரகடம் : வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
ஒரகடம் அருகே, கொத்தனாரின் பணம், செல்போனை வழிப்பறி செய்த, 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சூர்யாதேவி குடியிருப்பில் தங்கிக் கொண்டு எரையூரில் கொத்தனாராக வேலை செய்பவர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது நண்பர் காமராஜ். இவர்கள் இருவரும் கடந்த 8ம் தேதி அன்று இரவு 9.00 மணியளவில், கூலிப்பணம் ரூ.14,600 வாங்கிக் கொண்டு குடியிருப்பு அறைக்கு திரும்பினர்.
அப்போது, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், இருவரையும் வழிமறித்து, கத்தியால் தாக்கியுள்ளன்னர். மேலும், தேவேந்திரனிடம் இருந்து ரூ.14,600- பணத்தையும், காமராஜிடம் இருந்து கைப்பேசியையும் பறித்துச் சென்றதாக, ஒரகடம் காவல்நிலையத்தில் தேவேந்திரன் புகார் செய்தார். அதன் பேரில் , வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில், செங்கல்பட்டு மாவட்டம், அப்பூரைச் சேர்ந்த 1) கணபதி, 2) கண்ணன், 3) மணி (எ) பாட்டில் மணி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.