சந்தவேலூர் பள்ளி முன் காவலர்கள் இல்லாததால் விபத்து அபாயம்

சந்தவேலூர் பள்ளி முன் காவலர்கள் இல்லாததால் விபத்து ஏற்படும் அச்சம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-03-10 14:15 GMT

சந்தவேலூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கல்வி வட்டத்தின் கீழ் இயங்கியது சந்தவேலூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி. இங்கு 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் சிறப்பாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளி சென்னை&பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. மாணவர்கள் பாதுகாப்பான கல்வி கற்கும் வகையில் சுற்று சுவருடன் இப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் பள்ளி எதிரில் கிராமம் அமைந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலையினை கடந்தே பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

பள்ளி மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று காலை மாலை என பள்ளி நேரங்களில் சுங்குவார் சத்திர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு உதவி வந்தனர். கடந்த ஓரு மாத காலமாகவே பல்வேறு பணிகள் காரணமாக காவலர்கள் மாணவர்களுக்கு உதவ வருவதில்லை. சாலையை கடக்கும்போது அச்சத்துடனே கடந்து பள்ளிக்கு வருவதும் பின்பு பள்ளி முடித்து சாலையை கடந்து கிராமத்திற்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதியும் விபத்தில்லா காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படும் காவல்துறை அப்பகுதியில் சிறிதுநேரம் காவல் பணிக்கு காவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.


Tags:    

Similar News