ராமானுஜபுரம் ஏரி தாமரை பூக்கள் ரூ1.93 லட்சத்திற்கு ஏலம்
ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ராமானுஜபுரம் ஏரி தாமரை பூக்கள் ரூ1.93 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.;
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ராமானுஜபுரம் கிராமத்தில் தாமரை குளம் ஏரி பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஜீன் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை தாமரைப் பூக்கள் ஏராளமாக பூக்கும்.
இது காஞ்சிபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் இந்த தாமரை பூவை பறித்து விற்பனை செய்வது வழக்கம். இதனை கிராம ஊராட்சியின் நீர்ப்பாசன சங்கத்தின் ஏலம் விட்டு அதன் வருவாய் மூலம் கிராம பாசன கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படும்.
இந்த வருடம் கடந்த நான்கு மாத காலமாக இதுகுறித்து நீர்வளத் துறை, மாவட்ட விவசாயி நல கூட்டத்தில் என பல கட்டங்களில் அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ரஜினி குமரவடிவேல் என்பவர் கோரிக்கை விடுத்தும் , இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கையும் எடுத்த நிலையில், ஏலம் விடுவதாக ஸ்ரீபெரும்புதூர் பாசன பிரிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு இதற்கான அறிவிப்பு வெளியிட்டது.
அக்கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இதற்கான ஏலம் விடப்பட்டது. இதில் தாமரை பூ ஏரி, குளத்தினை ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 760 ரூபாய் ஏலம் போனது.
இந்நிகழ்வு கிராம விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.