ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் சுகாதார வளாகத்துக்கு 3 நாட்களாக பூட்டு, பொதுமக்கள் அவதி, பேரூராட்சி அலட்சியம்

ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் உள்ள சுகாதார வாளாகம் கடந்த 3 நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2021-06-25 01:45 GMT

ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2006-2007 ல் சுமார் 10 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நவீன கட்டண கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக இங்குள்ள மின் மோட்டார் பழுது காரணமாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள், குறிப்பாக பெண்கள் என பல தரப்பினர் தங்களது சுகாதார தேவைகளுக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம்  இதை சரி செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதால் பேருந்து நிலைய சுற்றுப்பகுதிகளில் சுகாதார நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ஊர் முழுவதும் சுவர் விளம்பரங்களால் சுகாதார மேம்பாடுகளை விளக்கும் பேரூராட்சி பொதுமக்கள் அதிகம் புழங்கும் பேருந்து நிலையத்தை ஒட்டி உளள கட்டண கழிப்பறை தொடர்ந்து பூட்டி உள்ளதை கண்டுகொள்ளாமல் உள்ளது.

பல நூறு தொழிற்சாலை ஊழியர்கள் , பொதுமக்கள் என கூடும் இடத்தில் இதுபோன்ற அலட்சிய செயல்களால் சுகாதாரம் எங்கே நிலவும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags:    

Similar News