ஸ்ரீபெரும்புதூரில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு
ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் விநியோகத்தை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது;
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி நாள்தோறும் ஆயிரக்கானக்ணோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருவதால் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. இதனால் ஆக்ஸிஜன் சிகிச்சை படுக்கைகள் எப்போதும் நிரம்பி காணப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் 3 தொழிற்சாலைகள் 24 மணி நேரம் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளது . இதில் ஒரு நிறுவனம் தனது இலக்கை தாண்டி பொதுமக்கள் சேவைக்காக உற்பத்தி செய்து, காவல்துறையினரின் பாதுகாப்புடன் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜன் அரசு மருத்துவமனைக்கு மற்றும் தனியார் முறையாக அனுப்பப்படுகிறது என்பதை கண்காணிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி 24மணி நேர கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி உள்ளார். இக்குழுவில் வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணிநேர சுழற்சி முறையில் பணிகளை கண்காணித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அவர்களுக்கு அறிக்கை அளிப்பார்கள்.
உயிர்காக்கும் ஆக்ஸிஜன் அனுப்புவதில் சிறிதளவு கூட தவறு நிகழாமல் கண்காணிக்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.