குன்றத்தூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 % வாக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

Update: 2021-10-09 16:30 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கியது .

குன்றத்தூர் ஒன்றியத்தில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாங்கு சாவடிகளில் குவிந்தனர். மாலை 6மணி இறுதி நிலவரப்படி  2, 75, 336 மொத்த வாக்கில் 91,582 ஆண்களும்,   93540 பெண்கள்11 இதரர்  என ஒன்றியத்தில்1,85,533 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 67.38 % வாக்குப் பதிவாகும்.

Tags:    

Similar News